அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி மறுப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இதனால், தமிழக அரசு வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த 14 நாட்களும் ஊரடங்கு விதி முறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த 14 நாட்களும் சுற்றுலாத் தளங்கள் மற்றும் பூங்காக்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காங்களுக்கும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *