டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொற்றைக் கட்டுபடுத்த அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து வருகிறது.
இதனால், வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த கீழ்க்காணும் தேர்வுகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.