மே 11ல் சட்டப்பேரவை கூட்டம்!

தமிழக முதல்வராக நேற்று , திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, முதல் சட்டப்பேரவை எப்போது கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழக 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-ஆவது தளத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாமல் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும். 12 ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 12 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.