அண்ணா நூலகத்தில் அண்ணா படமே இல்லை!
தமிழகத்தின் முதல்வராக, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மற்ற அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், இன்று அவர் அண்ணா நூலகத்தை ஆய்வு செய்தார்.
நூலகத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முந்தைய அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை. முக்கியமாக அண்ணா நூலகத்தில் அண்ணாவின் படமே இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கான அறிக்கையை அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன் என கூறியுள்ளார்.