கண்கலங்கிய மு.க. ஸ்டாலின்
தமிழகத்தின் முதல்வராக இன்று ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்றுக் கொண்டார் மு.க. ஸ்டாலின். பதவியேற்பு விழா முடிந்ததும் ஆளுநர் தமிழக முதல்வர் அவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார்.
பின்னர், கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று தலைவர் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் கண் கலங்கினார். அதன்பின், கருணாநிதியின் சமாதிக்குச் சென்று ஆசி பெற உள்ளார்.