மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் உரை

தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தனது முதல் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் புதிதாக தலைமைச் செயலாளராக பதவியேற்றுள்ள வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்களும் பங்கேற்றுள்ளார்.
கொரோனா பரவல் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் போர்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க உள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன