முதல்வரை பாராட்டிய சங்கர்!
தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.
இதனால், அவருக்குப் பல அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் சங்கரும், தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து கொரோனா சிகிச்சைகளும் இலவசம் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்களுக்காக தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.