தமிழகத்தில் 27 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பரவல் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
இன்று ஒரே நாளில் 26,465 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,23,965 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6738 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 197 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 15171-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 22,381 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் நோய்த்தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 11,73,439 ஆக அதிகரித்துள்ளது.