வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் 11 ஆவது முதல்வராக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!

காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *