’முதலமைச்சர் ஸ்டாலின்’ முதலில் கையெழுத்திடும் கோப்புகள் என்ன?

தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளார். கொரோனா காலம் என்பதால் மக்கள் கூடுவதைத் தவிர்க்க ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் கையெழுத்திடும் கோப்புகள் என்னென்ன என்ற ஆர்வம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

முதல் 3 கையெழுத்துகளில் ஒன்றாக உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என்ற கோப்பில் கையெழுத்திட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கும் திட்டத்திலும் கையெழுத்திட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *