பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா

கொரோனா இரண்டாவது அலையின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
பரவும் வேகம் மட்டுமல்லாமல், பாதிப்பின் வேகமும் அதிகமாகத் தான் உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.
அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.