தமிழகத்திலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் கொரோனா பரவலால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது நாளை ஒரு நாள் மட்டும் தான் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது என மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.