2 வது அலையவே தாங்க முடியல இதுல 3 ஆவது அலையா?

இந்தியாவில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தைப் பார்த்து வருகிறோம். வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனவர்களின் பிணங்களை எரிக்க டோக்கன் வாங்கி வரிசையில் காத்திருந்து எரிக்கின்றனர்.

முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிப்பின் வேகமும், தொற்று பரவும் வேகமும் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் மூன்றாவது அலையும் இந்தியாவை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

முறையான வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், முழு ஊரடங்கு போன்றவற்றால் தான் கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடியும் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *