நடிகைகளையும் விட்டுவைக்காத கொரோனா
தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி வருகின்றனர்.
சில நடிகர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இறந்தும் உள்ளனர்.
இந்நிலையில், நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குணமைடந்து வருவதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.