தம்பிக்கு அண்ணன் வாழ்த்து
தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக பல அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் மு.க அழகிரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர், “முதலமைச்சராக பதவியேற்க உள்ள எனது தம்பிக்கு வாழ்த்துகள். அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார்” என தெரிவித்துள்ளார்.