ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். நேற்று நடந்த எம்.எல்.ஏக்கள் பொதுக் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு இன்று ஆளுநரிடம் ஸ்டாலின் உரிமை கோரினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி, இன்று மாலைக்குள் ஆட்சியமைக்க அழைப்பு வரும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *