புறநகர் ரயில்களில் பயணிக்கத் தடை!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதில் புறநகர் ரயில்களில்பொதுமக்கள் பயணிக்கத் தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த தடை மே 6 முதல் மே 20 வரை அமலில் இருக்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.