ஆக்ஸிஜனுக்காக மருத்துவர்களே போராடும் நிலை!

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதே நிலை தற்போது தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 320 கொரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 100 பேர் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவில் மட்டும் மொத்தம் 13 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர்.

இதனால், மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கி நோயாளிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்து முடிக்க வேண்டும் என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *