ஆட்சியமைக்க நாளை உரிமைகோருகிறார் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்து வாக்கு எண்ணிக்கையும் மே 2 ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

நாளை அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருகிறார். மேலும் வருகிற மே 7 ஆம் தேதி மிகவும் எளிய முறையில் தமிழக முதல்வராக பதவியேற்கவும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *