சட்டமன்ற கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் வென்ற வேட்பாளர்கள் 133 பேரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் 125 பேரும், திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 வேட்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் விவரம்:
1.அரியலூர் தொகுதியில் சின்னப்பா (மதிமுக)
2.மதுரை தெற்குத் தொகுதியில் பூமிநாதன் (மதிமுக)
3.வாசுதேவநல்லூர் தொகுதியில் சதன் திருமலைக்குமார் (மதிமுக)
4.சாத்தூர் தொகுதியில் ரகுராமன் (மதிமுக)
5.நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷாநவாஸ் (விசிக)
6.திருப்போரூரில் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக)
7.செய்யூரில் பாபு (விசிக)
8. காட்டு மன்னார் கோயில் தொகுதியில் சிந்தனைச் செல்வன் (விசிக)
இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேந்தெடுக்கப்பட உள்ளார்.மேலும் அவர் நாளை தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோருகிறார். அதனைத் தொடர்ந்து வருகிற மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.