ஸ்டாலின் மீண்டும் அவசர ஆலோசனை

தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். தற்போது, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிதாக பதவியேற்க உள்ள அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கனவே, தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *