ஐபிஎல் தொடர் ரத்து!

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவிலின் வேகம் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திலும் 14 ஆவது ஐபிஎல் தொடர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 8 அணிகளாக பிரிந்து விளையாடி வரும் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை, கொல்கத்தா அணி வீரர்கள் இரண்டு பேருக்கும், ஹைதராபாத் அணி வீரர் சாஹாவுக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.