பீஹாரில் அமலாகிறது முழு ஊரடங்கு

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. வட மாநிலங்களில் தொற்று பாதிப்பின் வேகம் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பதால் பல பாதுகாப்பு நடைமுறைகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பீஹாரில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில், மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *