முழு ஊரடங்கு தான் ஒரே தீர்வு
இந்தியாவில், கொரோனா பரவலின் வேகம் காட்டுத் தீயைப் போல பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு கையாளும் விதம் மோசமாக உள்ளது.
இந்த செயலற்ற தன்மையால் பல அப்பாவி மக்கள் கொரோனாவால் கொல்லப்படுகிறார்கள். இந்த உண்மையை மத்திய அரசு உணரவில்லை. எனவே, இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி நாடு முழுவதும் பொது முடக்கத்தை ஏற்படுத்துவது தான்” என்று தெரிவித்துள்ளார்.