தமிழகத்தில் 21 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 21,228 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பானது 12,49,292 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,112 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,09,450 ஆக அதிகரித்துள்ளது.

தினசரி அதிகரித்து வரும் கொரோனாவால் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *