இன்றைய ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு
இந்தியாவில், 14 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் கொரொனா காலம் என்றாலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கிடையேயான லீக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.