ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் சந்திப்பு

தமிழகத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கொரோனா நிலைமை குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அடுத்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.