ஸ்டாலின் தலைமையில் நாளை கூடுகிறது எம்.எல். ஏக்கள் கூட்டம்

நேற்று, நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக பெரும்பான்மை பெற்றுள்ளாதால் ஆட்சியமைக்க உள்ளது. மே 7 ஆம் தேதி பதிவியேற்க உள்ளார். இதற்காக, வெற்றி பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உரிமை ஏற்க வேண்டும்.
இது குறித்து, திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும்.
அப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.