தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் வாக்கு எண்ணிக்கையின் போதும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப் பட வேண்டும் என சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது உள்ள முன்னிலை நிலவரப்படி திமுக தான் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால், அண்ணா அறிவாலயம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக செயல்படுத்த வில்லை எனக் கூறி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.