ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து
தமிழகத்தில், தற்போதுள்ள முன்னணி நிலவரப்படி திமுக தான் ஆட்சியமைக்கும் நிலை உள்ளது. இதனையடுத்து, பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினி திமுக தலைவருக்கு தனடு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “சட்டமன்றத் தேர்தலில் அயராது உழைத்து வெற்றி அடைந்து இருக்கும் என் அன்பு நண்பர் மு. க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் புகழ் பெற மனமார வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.