ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து!

தமிழகத்தில், தற்போதுள்ள வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி திமுக தான் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தேசியத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினுக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.