வீட்டிலேயே கொண்டாடுங்கள்! ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள முன்னிலை நிலவரப்படி, திமுக தான் ஆட்சி அமைக்கும் நிலை நிலவி வருகிறது.
இதனால், அண்ணா அறிவாலயத்தில் மக்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முழு ஊரடங்கு என்பதால் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் வெற்றியை தொண்டர்கள் வீட்டில் இருந்து கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.