மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் வாழ்த்து!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி திமுக 153 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் திமுக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு சிறப்பான நல்லாட்சியைத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.