ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தொடரும் மரணம்!
இந்தியாவில், கொரோனா இரண்டாவது தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் உயர்ந்து வரும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் மக்கள் படுக்கை கிடைக்காமலும் ஆக்ஸிஜன் வசதி இல்லாமலும் இறந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த 8 பேரில் மருத்துவர் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.