விதவையானது கேமரா! வைரமுத்து இரங்கல்

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த கே.வி. ஆனந்த்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் இன்று காலமானார்.

ஒளிப்பதிவாளர் மட்டுமல்லாமல் இயக்குநரகாவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து, தனது பாணியில் அஞ்சலியை செலுத்தியுள்ளார். இது குறித்து, அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,

வருந்துகிறேன் நண்பா!

திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.

என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *