கொரோனா நோயாளிகளுக்கு உதவ புதிய வசதி

தமிழகத்தில், நாளுக்கு நாள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் கூடிய ஆக்சிஜன் இடம் இல்லாததால் பல நோயாளிகள் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் எங்கு கிடைக்கும் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்காக தமிழக சுகாதாரத் துறை புதிய வசதி ஒன்றை அறிவித்துள்ளது.

@1O4GoTN என்ற ட்விட்டர் கணக்கின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உள்ள படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை அனைத்து மக்களுக்கும் சென்று சேர #BedsForTN என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *