மே மாதம் முதல் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது!

வரும் மே மாதம் முதல் ரஷ்ய அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் -வி என்ற கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட், பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் நாட்டின் பல இடங்களில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *