ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம்
தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறு நாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், இதில் அனைத்து வேட்பாளர்களும் மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பில் திமுக தான் வெற்றி பெறும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.