நாடு முழுவதும் 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு?

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து  150 மாவட்டங்களுக்கு முழு  ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் மிக வேகமாக கொரோனா தொற்று  பரவி வரும் நிலையில் எப்படியாவது பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவை உண்டாகியுள்ளது. ஆனால் மறுபடியும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் அது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும்.

எனவே நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 150 மாவட்டங்களில் மட்டும் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர லாக்டவுன் போடலாம் என டெல்லியில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இன்றோ, நாளையோ இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *