#ResignModi ஹேஷ்டேகை தடை செய்த பேஷ்புக்!

இந்தியாவில் #ResignModi ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டானதை தொடர்ந்து  ஹேஷ்டேகை பேஷ்புக் நிறுவனம் தற்காலிகமாக தடை செய்துள்ளது. 

இந்தியாவில் கொரொனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் பன்மடங்காக உயர்ந்து வருகிறது. உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருந்துவருகிறது. மேலும் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் இறந்து வருகின்றனர்.

இதன் காரணமாக கொரோனா சூழ்நிலையை சரியாக திட்டமிடாமல் திணறி வருவதாக பிரதமர் மோடி மீதும், மத்திய பாஜக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து  சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை பதவி விலகக் கோரி #ResignModi என்ற ஹேஷ்டேக்கை பலரும் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் இந்த ஹேஸ்டேகை சமூகவலைதளங்களில் இருந்து பேஷ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட பதிவில், தவறுதலாக தான்#ResignModi ஹேஷ்டேக் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், இந்த தற்காலிக தடை விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதனை மோடி சொல்லி செய்யவில்லை என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *