ஜூலை 31 வரை ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி!

இந்தியாவில், நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக வேதாந்தா நிறுவனம் தங்களது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

இதனால், நான்கு மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்குமாறு தெரிவித்திருந்தது. இதற்கு, அனைத்து கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டதில், ஆலையைத் திறக்க அனுமதியளிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், ஜூலை 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரித்துக் கொள்ளலாம். அதன் பிறகு, ஆலையின் செயல்பாடு பற்றி முடிவெடுக்கப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *