தடுப்பூசி விலையில் 25% குறைத்தது சீரம் நிறுவனம்!

கொரோனா தடுப்பூசி விலை அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து  கோவிஷீல்டு தடுப்பூசி விலையில் 25 சதவிகிதத்தை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. சமீபத்தில் சீரம் நிறுவனம்  ரூ.250-க்கு விற்பனை செய்த கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என அறிவித்தது.

இந்த விலையேற்றத்துக்கு எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து தற்போது தடுப்பூசி விலையில் 25% குறைக்கப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் எனவும், தனியார் மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மாற்றமில்லை எனவும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *