டிஜிட்டல் இந்தியாவுக்கு நேர்ந்த துயரம்… பரிதாபமாக பலியான பெண்!

கூகுள் பே-யில் பணம் அனுப்ப மறுப்பு தெரிவித்த ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ஆந்திராவில் உள்ள பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பணம் கட்டினால் தான் சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

பெண்ணை அழைத்து சென்ற உறவினர்கள், கூகுள் பே-யில் பணம் இருப்பதாகவும், அதனைக்கொண்டு சிகிச்சை அளிக்கும்படியும் கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகத்தினர், கறாராக கேஷ் மட்டுமே வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து சுமார் 3 மணிநேரம் ஏடிஎம் ஐ தேடி அலைந்த உறவினர்கள், ஒருவழியாக பணத்துடன் மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட பெண், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் இறப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என்று புகாரளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *