குடமுழுக்கால் 144 தடை உத்தரவு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் குடமுழுக்கு விழா நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனால், பக்தர்களும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.
மேலும், வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழாவை இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.