அடிமைகளின் ஆர்வமின்மை, ஆதிக்கவாதிகளின் அக்கறையின்மை தான் தமிழகம் பின்தங்க காரணம் – உதயநிதி!

அடிமைகளின் ஆர்வமின்மையும், ஆதிக்கவாதிகளின் அக்கறையின்மையாலும் தான் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ”44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என அறிவித்துள்ள நிலையில்கூட கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது. தற்போது மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டவாரியாக தேவை, அரசிடம் உள்ள கையிருப்பு.. போன்ற தகவல்களை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்

Image

இதுவரை தடுப்பூசி போடப்பட்டதில் தமிழகம் கடைசியிடத்திலும்-ஊசிகளை வீணடித்ததில் முதலிடத்திலும் உள்ளோம். முற்போக்கு மாநிலமான தமிழகத்தை அடிமைகளின் ஆர்வமின்மையும்,ஆதிக்கவாதிகளின் அக்கறையின்மையும் இந்தளவுக்கு பின்தங்க வைத்துள்ளன. தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டுசேர்த்து கொரோனாவை வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *