நீங்க கண்டிப்பா வரனும்… மருத்துவருக்கு அழைப்பு விடுக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் சித்த மருத்துவமான கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு தரும் முதன்மை மருந்தாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலரும் சித்த மருத்துவத்தை நாட துவங்கினர். இந்த நிலையில் தனது சித்த மருத்துவத்தால் பலரையும் குணப்படுத்தி வந்தார் சித்த மருத்துவர் வீரபாபு.
இதனையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றை சிகிச்சை மையம் ஆக மாற்றி அவருக்கு தமிழக அரசு வழங்கியது. மேலும் அதில் அனுமதிக்கப்பட்ட 6000 பேரை காப்பாற்றியதுடன், உரிய சிகிச்சையால் அனைத்து உயிரையும் சித்த மருத்துவர் வீரபாபு காப்பாற்றினார்.
பின்னர் கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்ததை தொடர்ந்து அவரின் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூடப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவர் வீரபாபுவை தமிழக அரசு அழைத்துள்ளது.
சமீபத்தில் தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரான தமிழருவி மணியன், கொரோனா தொற்றால், உயிருக்கு போராடிய போது, அவருக்கு ஒரு மாதகாலமாக சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.