ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதி மன்றம் அனுமதி!
இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தற்போது, நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க வேதாந்தா நிறுவனம் தங்கள் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
ஆக்ஸிஜன் உற்பத்திக்கான மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், பல்வேறு நிபந்தனைகளுடன் ஜூலை மாத இறுதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசாரணை முடிவில் ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. உயிர் காக்கும் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். தாமிர ஆலைக்குள் செல்லக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் 3 பேர் நியமிக்கப்படுவர். தமிழக மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.