கேரளாவில் கொரோனா புதிய உச்சம்!
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவிலும் கொரோனா பரவல் அதி தீவிரமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் கேரளாவில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாநிலத்தில் கொரோனா தினசரி பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கேரள அரசு பெருந்தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.