ரூ. 2 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய கேரள மாற்றுத்திறனாளி!

கேரளாவைச்  சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளது பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். மாற்றுத் திறனாளியான இவர் பீடித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதற்காக போடப்படும் தடுப்பூசி ரூ. 400க்கு  விற்கப்படுகிறது.  இதனையறிந்து பெரிதும் வருத்தமுற்ற ஜனார்த்தனன் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 இலட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். தற்போது அவரது வங்கி கணக்கில் வெறும் ரூ.850 மட்டுமே உள்ளது.

இதனையறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், போதுமான பணம் இல்லாத போதும் ஏழை மக்களுக்காக உதவிய ஜனார்த்தனின் செயல் தன்னை சிலிர்க்க வைக்கிறது என்று  பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *