பொய் சொன்னா யாரா இருந்தாலும் அறை விழும்… யோகிக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!

ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த உத்திரபிரதேச முதல்வருக்கு பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதை அடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்கு முழுவதுமாக மறுப்பு தெரிவித்து வருவதுடன், ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து தகவல் தெரிவித்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரது கருத்துக்கு பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் ஆவேசமான கருத்து ஒன்றினை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும்” என்று தெரிவித்துள்ளார்.

இன்றும் கூட உத்திர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *